டெல்லி: தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன அதேசத் துரோக வழக்கில் ஏற்கனவே கைதானவர்கள் பிணை கோரலாம் என்றும் கூறி உள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ மூலம் தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, தேச துரோக வழக்கு சட்ட பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த சட்டத்தில்,  மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை இச்சட்ட பிரிவின் கீழ் எந்தவிதமான வழக்கு களையும் பதிவு செய்ய வேண்டாம்  என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தேசத்துரோக சட்டம். இந்த சட்டத்தின்போதும், ஆளும்கட்சி, அரசுக்கு எதிரான கருத்து கூறுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இதையடுத்து, தேச துரோக வழக்குகளைப் பதிவு செய் யும் சட்டப்பிரிவான 124(A) ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிம ன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த மனு மீதான விசாரணைகள் நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகின்றன. நேற்று (மே 10ந்தேதி) நடை பெற்ற விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்வது அல்லது மறுபரிசீலனை செய்வது தொடர்பான முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதனை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், இந்த சட்டத்தை  மறுபரிசீலனை செய்யும் வரை தேசத்துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை சு தாக்கல் செய்ய ஆணையிட்டது. தேசத்துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பணியை 3-4 மாதங் களில் முடிக்கவும் வலியுறுத்தியது.

இதையடுத்து வழக்கு இன்று (மே 21, 2022) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தேசத்துரோக  சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  மாநில காவல்துறையினரை தேச துரோக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்குமாறு உத்தரவிட முடியாது.  வரும் காலத்தில் ஒருவர் தேசத் துரோக செயலில் ஈடுபட்டால் அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.  அப்படியிருக்கும்போது 124ஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும் இதைத் தவிர்த்து எந்த உத்தரவு வழங்கினாலும் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று தெரிவித்தது.

ஆனால், இதை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம்,  தேச துரோக வழக்குகளை தற்காலிகமாக பதிவு செய்யக்கூடாது என மத்திஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. 124(A) சட்டப்பிரிவு விவகாரத்தில் மத்தியஅரசு மறுபரிசீலனை செய்யும்வரை வழக்குகளை பதிய தடை விதிப்பதாக அறிவித்தது.

மத்திய மாநில அரசுகள் இப்போதைக்கு தேச துரோக வழக்குகளை பதிவு செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா,  தேசத்துரோக சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதியப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைக்கும் தற்காலிக தடை விதிக்கப்படுவ தாகவும், தேசத்துரோக வழக்குகளில் சிறையில்  இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் உத்தரவிட்டார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மிருத்யுஞ்சயகுமாா் நாராயண் திங்கள்கிழமை தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், ‘ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின் காலாவதியான 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ரத்து செய்யப்பட்டன. ஆங்கிலேயா்களின் காலனித்துவ சட்டங்களையும் நடைமுறைகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதி மன்றத்தின் இன்றைய உத்தரவின் மூலம் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம், சுமார் 162 ஆண்டு களுக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.