டெல்லி: முகேஷ் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு – செலவை அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.
நமது நாட்டில், குடியரசுதலைவர், பிரதமர், முதல்வர் உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான இசட், எக்ஸ், ஒய் வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வகையான பாதுகாப்புக்கும், தனித்தனியான நடைமுறைகள், அதற்கான பாதுகாப்பு வீரர்கள் வேறுபடும்.
இந்த நிலையில், ‘ இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வரும் ஆசியாவின் முதலாவது பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முகேஷ் அம்பானிக்கு ‘இசெட் பிளஸ்’ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வந்தது.
ஆனால், இந்த பாதுகாப்பு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விசாரித்து வந்தது. விசாரணையின்போது, பிரிதிவாதிகள், வணிக நோக்கமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிறார்கள், நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் அம்பானிகளின் வணிக நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ அல்லது பகுதியிலோ கட்டுப்படுத்தப் பட்டால், பாதுகாப்பு வழங்குவதன் நோக்கமே விரக்தி அடையும் . அதனால், அவர்களுக்கு உள்நாட்டின் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் Z+ பாதுகாப்பு வழங்குவதற்கான முழு செலவுகள் மற்றும் செலவுகள் அவர்களால் ஏற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இசட் – ஒய் வகை பாதுகாப்பு என்பது என்ன?
மத்திய உள்துறை அமைச்சகத்தால் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் & பிரபலங்களுக்கு 4 வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பை பொறுத்தவரை இசட் பிரிவுக்கும், இசட் பிளசுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அதன், இசட் (Z), இசட் ப்ளஸ் (Z+), ஒய் (Y), எக்ஸ் (X)
இசட் & இசட் ப்ளஸ் என்பது என்ன?
இசட்பிளஸ் என்பது மிக மிக உயரிய பாதுகாப்பு பிரிவு. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் , பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனைப்படைகளுக்கு மத்தியில் ஒரு தலைவர் வலம் வந்தால் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார் என தெரிந்துகொள்ளலாம். இசட் பிளஸ் பாதுகாப்பில் நாள் ஒன்றுக்கு 36 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.
இசட் பிரிவில் 22 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
இந்த இரண்டு பிரிவுகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கி மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும்.
Y, X, ஆகிய இரண்டு பாதுகாப்பு பிரிவுகளை காட்டிலும் இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் வீரர்கள் சர்வ வல்லமை படைத்தவர்களாக திகழ்வார்கள். ஆயுதங்களே இல்லாமல் கூட எதிரிகளை சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள்.
எக்ஸ் – ஒய் பாதுகாப்பு:
ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் நபர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பது.
எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் நபர்களுக்கு 2 / 2+ வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். (பொதுவாக 2. எப்பொழுதாவது 2+).
அமைச்சர்கள் அளவில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு தரப்படும். பாதுகாப்பு படைகளிலேயே மிகவும் கடைநிலையில் உள்ள பிரிவு இது.