டில்லி :
கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அய்யாகண்ணு உள்ளிட்டோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனை தமிழக அரசு ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயி களின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.