டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு இன்றுமுதல் 2 வாரங்கள் குளிர்கால விடுமுறையை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்து உள்ளார். மீண்டும் 2023ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்திற்கு விடுமுறை பெஞ்ச் இருக்காது என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறினார்.
இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டிச.17 முதல் ஜனவரி 1 வரை உச்சநீதிமன்றத்தின் எந்த அமா்வும் செயல்படாது’, இருவாரங்கள் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், விடுமுறைக்குப் பின்னா், ஜனவரி 2-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது,
அதிக விடுமுறை நாட்களால்தான் வழக்குகள் தேக்கத்துக்கு காரணம் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்த நிலையில், விடுமுறை கால அமர்வு கூட செயல்படாது என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திடீரன அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.