சென்னை: சனாதன விவகாரம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக  தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில்  தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.   இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த மாநாட்டில் இந்து தர்மம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கப்பட்டன,.  இந்த நிகழ்ச்சியில்   விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் எதிர்க்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒழிக்கப்பட வேண்டியது, டெங்கு கொசுவை போன்று ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல மாநிலங்களில் உதயநிதிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், சனாதனத்திற்கு எதிராக நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு பாபு கலந்து கொண்டது அரசியல் அமைப்புக்கு எதிரானது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது  அத்துடன் சாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் பற்றி விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த  மாநாடு குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

அத்துடன் அமைச்சர் பேச்சு எதைப் பற்றியது என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சனாதன விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என  கூறிய  உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.