டெல்லி:
கோர்ட்டுகளில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் போக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக சுப்ரீம்   கோர்ட்டு எச்சரித்து உள்ளது.
supreme
கோர்ட்டுகளுக்கு நீதிபதிகள்  நியமனம் செய்வதில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனம் மற்றும் இடம்மாறுதல் தொடர்பான வழக்கில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக சாடியுள்ளது.
சுப்ரீம் கோட்டில் இருந்து இடம்மாறுதல் தொடர்பான 75 பேர் பட்டியல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து பேசிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி,  நீதிபதிகள் நியமன விவகாரங்களை முடக்கிப் போடுவது யார் என்பதை அரசு கோர்ட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றமே மத்திய அரசின் விவகாரங்களில் தலையிட நேரிடும். இந்த காலதாமதம் தொடர்பாக 4 வார காலத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கின்படி இந்த வருடம் மே மாத இறுதி வரை,  இந்தியா முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 2.18 கோடி வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இவற்றில் 59.3 லட்சம் வழக்குகள் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தீர்க்கப்படாமல் உள்ளது. 22.3 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் தீர்க்கப்படாமல் உள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிக்கப்படாத வழக்குகள் உள்ள மாநிலங்களில் உ.பி., முதலிடத்தில் (6.6 லட்சம்) உள்ளது.
குஜராத் – 5.2 லட்சம், மகாராஷ்டிரா – 2.51 லட்சம், பீகார் – 2.3 லட்சம், ஒடிசா – 1.83 லட்சம். இவற்றில் மிக குறைந்த பட்சமாக பஞ்சாப்பில் தான் 1328 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் தீர்க்கப்படாமல் உள்ளது.
மூத்த குடிமக்களால் தொடரப்பட்டு வழக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா – 2.07 லட்சம், கர்நாடகா – 1.07 லட்சம், தமிழகம் – 64,018, உ.பி., – 63,762, குஜராத் – 49,837 உள்ளன.
இவ்வாறு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.