டெல்லி: அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியா உள்பட உலக நாடுகளில் எரிபொருள்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவில் எரிபொருட்களை சிக்கனமாக செலவிட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் இரண்டு நாட்கள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் எதிரொலியாக பிரதமர் நரேந்திர மோடி எரிபொருளை சேமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தனது செயல்பாடுகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது உச்ச நீதிமன்றம்: இதர நாட்களில் காணொளி வாயிலாக மட்டுமே விசாரணை; நீதிபதிகள் ஒரே வாகனத்தைப் பகிர்ந்துகொள்வர்; ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணி’ முறை என பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதாவது, உச்சநீதிமன்றத்தில் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாட்கள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை. மற்ற நாட்களில் வழக்கம்போல் நேரடி, காணொலி மூலம் விசாரணை நடைபெறும் என்றும், பதிவாளர் துறையில் பணிபுரியும் 50% ஊழியர்களுக்கு, வாரத்திற்கு 2 நாள் வொர்க் ப்ராம் ஹோம் (Work from Home) வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
எரிபொருள் சிக்கனம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.