டெல்லி:  நீதிமன்றஅவமதிப்பு வழக்கில், மூத் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு 1ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், கடந்த  ஜூன் 28, 29-ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில், தலைமை நீதிபதி குறித்தும், நீதித்துறை குறித்து விமர்சித்து வெளியிட்டு இரு பதிவுகள் சர்ச்சை ஆனது.

நீதித்துறையை விமர்சிப்பதாகக் கூறி பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முன்னெடுத்தது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து, பிரசாந்த் பூஷன் குற்றவாளி என  ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில்,  இந்த வழக்கில்,  தீர்ப்பு தேதியை ஆகஸ்ட் 25-க்கு தள்ளி வைத்தது. பின்னர் மேலும் தள்ளி வைக்கப்பட்டு, 31ந்தி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம் பரபரப்பான மற்றும் விநோதமான தீர்ப்பை வழங்கி உள்ளது.

பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்து உள்ளது. மேலும், இந்த அபராதத் தொகையை செலுத்த அவருக்கு 15 நாட்கள் அவகாசமும் வழங்கி உள்ளது.  செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அபராதம் செலுத்தாவிடில் 3 மாதம் சிறைத் தண்டனை என்றும் உத்தரவிட்டு உள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

[youtube-feed feed=1]