Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் பின்னடைவு…. மருத்துவமனை தகவல்

Aug 31, 2020

டெல்லி: உடல்நலம் பாதிப்பு காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள,  முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோச மடைந்து இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆகஸ்டு மாதம்   10-ந் தேதி உடல்நலப் பாதிப்பு காரணமாக, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவருக்கு ஏற்கனவே  கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் இருந்த நிலையில்,   மூளையில் கட்டி இருந்தது தெரிய வந்தது. அதை அகற்ற ஆபரேசன் செய்யப்பட்டது. இதனால், அவர் கோமா நிலைக்கு சென்றார். அதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை  நேற்று முதல் மேலும் பின்னடைவை சந்தித்து உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. அதில்,  பிரணாப் முகர்ஜியின் ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக, மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.

ஒருவருக்கு, செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு கள், விரைவாக செயலிழப்பதுடன், பிற நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது மருத்துவ ரீதியிலான தகவல்.

Post navigation

தொழில்அதிபரை திருட்டு தொழிலுக்கு  தள்ளிய ஊரடங்கு..
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம்

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer