உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரில் விசாரணை – தலைமை நீதிபதி தகவல்

Must read

புதுடெல்லி: 
ச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோணா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகளை அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணைகள் அனைத்தும் இணையம் மூலமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நேரில் நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்த கிரியிடம் தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article