தீர்ப்பு வெளியாகும் வரை ஆதார் கட்டாயமில்லை….உச்சநீதிமன்றம்

டில்லி:

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்போன், வங்கி கணக்கு சமையல் காஸ் போன்றவற்றில் மார்ச் 31ம் தேதிக்கு ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது.

ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரிக்கிறது.

இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை கெடு நீட்டிக்கப்படுவதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
English Summary
Supreme Court has extended the March 31 deadline for Aadhaar linkages till the constitution bench delivers judgement