டெல்லி: மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கோரி பாஜக தலைவர் பிரபாகர் துக்காராம் ஷின்டே (Prabhakar Tukaram Shinde) தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மும்பை பெருநகர மாநகராட்சிக்கு கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன்படி வெற்றி பாஜக கூட்டணி சார்பாக, மாநகர மேயர் பதவி, சிவசேனாவுக்கு வழங்கப்பட்டது. 2வது பெரிய கட்சியான பாஜக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நிராகரித்தது. ((அது அப்போது சிவசேனாவுடன் கூட்டணியில் பாஜக இருந்தது), இதனால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
பின்னர் கடந்த 2020ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலையடுத்து, முதல்வர் வேட்பாளர் இழுபறியில் பாஜக சிவசேனா இடையேகூட்டணி முறிந்தது. இதை யடுத்து, மும்பை மாநகராட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதற்கிடையில், மகராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர்ந்து மகாவிகாஸ் கூட்டணி அமைத்து, சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், பாஜகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக , மாநில பாஜக தலைவர் பிரபாகர் துக்காராம் ஷின்டே மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை ‘வெறும் மாற்றம்’ என்று கூற முடியாது என்று கூறி 2020 செப்டம்பர் 21 அன்று தள்ளுபடி செய்தது.
மும்பை உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஷின்டே மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமைநீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜகவுக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவசேனாவுடன் கூட்டாக மாநிலத்தை ஆளுகின்ற போதிலும், மும்பை கார்ப்பரேஷன் கவுன்சிலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருப்பது ஒரு முரண் என்று கூறினார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.ஏ.போப்டே, மும்பை பெரு மாநகராட்சி சட்டத்தின்படி மற்றும் 2017 ல் பாஜக வெளிப்படையாக பதவியை விட்டுக்கொடுத்த நிலையில், தற்போது அதை கோர முடியாது. “உங்கள் உறவு எவ்வாறு மாறுகிறது என்பதைப் பொறுத்து சட்டபூர்வமான உரிமை உள்ள எந்தவொரு சந்தர்ப்பமும் எங்களுக்குத் தெரியாது. உறவு உங்கள் சட்ட உரிமையை பாதிக்காது” என்றும், “நீங்கள் எதிர்த்தால் மட்டுமே விஷயங்கள் சரியானவை என்ற தத்துவத்திற்கு நாங்கள் குழு சேரவில்லை” நகராட்சி மன்றத்தில் ஒரு கட்சி அதை எதிர்க்கும்போது சட்டமன்ற மட்டத்தில் மற்றொரு கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று சாடியதுடன் பாஜக தலைவரின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.