பாட்னா: பீகாரில் 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியரக்கு தூக்கு தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால், 11 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியிடம் மருத்துவர்களும் பெற்றோரும் விசாரித்ததில், பள்ளி தலைமையாசிரியரும், ஆசிரியரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்து உள்ளது.

அதன்படி சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவதேஷ் குமார், வழக்கில் முக்கியக் குற்றவாளியான, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு தூக்கு தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

மற்றொரு குற்றவாளியான, ஆசிரியராக இருந்த அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.