டெல்லி:  ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெற்று வரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில், ஓடிபி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் ஆதார் விவரங்களைச் சேகரிப்பது சட்டவிரோதமானது என திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த   உயர்நீதிமன்றம்,. ஓடிகே கேட்பது சட்டவிரோதம், காவல்துறையினர்  யாருக்கும் ஓடிபி கூற வேண்டாம் என கூறும்போது, இவர்கள் எப்படி ஓடிகே கேட்க முடியும் என்று கூறி, தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் OTP சரிபார்ப்பு முறை தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு பிரச்சினைகளை எழுப்பியதால் சென்னை உயர் நீதிமன்றம் தடையை விலக் மறுத்து,  திமுகவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி கேட்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை…