வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் வரை அல்லது புகார் வரும் வரை காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு பேசுபவர்கள் எந்த மதம் எந்த சாதியினர் என்று பாகுபாடு பார்க்காமல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவின் பன்முகத் தன்மை காப்பாற்றப் படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.