20 ஆண்டு சட்ட போராட்டத்திற்குப் பின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.

1996-ஆம் ஆண்டு நளினி பாய் என்பவரிடம் இருந்து கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் 5 கிரவுண்டு நிலத்தை வாங்கி, அங்கு வணிக வளாகம் ஒன்றை கட்ட திட்டமிட்டார்.

ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்கிற கட்டுமான நிறுவனத்திடம் வணிக வளாகம் கட்ட 3.58 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு அந்த இடத்தை கையகப்படுத்த முயன்றதை அடுத்து இருதரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அந்த கட்டுமான நிறுவனத்திற்கு எதிராகவும், சொத்தை மீட்டு தரக் கூறியும் கவுண்டமணி தரப்பில் இருந்து 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 2024 மார்ச் மாதம் கவுண்டமணிக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த சொத்தை கவுண்டமணியிடம் நீதிமன்றம் நேற்று ஒப்படைத்தது.

சொத்து தகராறு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கவுண்டமணிக்கு வெற்றி… …