சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக தொடர்பான அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் அதை முடித்து வைத்து உத்தரவிட்டது.
கடந்த 2023ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்ததாக பேசியிருந்தார். இது அப்பட்டமான அவதூறு என கூறி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பாபு முருகவேல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கை எதிர்த்து அப்பாவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுகவின் அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அதிமுக தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இநத் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை’ எனக் கூறி, அவருக்கு எதிரான அவதூறு வழக்கை சுப்ரீம்கோர்ட் முடித்து வைத்தது. அதையடுத்து, இநத் வழக்கைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறியதை குடுத்து, அ.தி.மு.க., தரப்பு வழக்கை வாபஸ் பெற்றறது.