புதுடெல்லி:
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார்.
புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இதையடுத்து நாளை மறுதினம் அவர் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
நாளையுடன் யுயு லலித் ஓய்வு பெறும் நிலையில், நாளை அரசு விடுமுறை என்பதால் இன்று அவர் தலைமையிலான அமர்வு மேற்கொள்ளும் வழக்கு விசாரணையே கடைசி விசாரணையாகும். இதனால் அந்த விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.