சென்னை: இந்தியாவின் தலைமை நீதிபதியான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்றைய நாளே நீதிமன்ற பணியில் கடைசி நாளாகும். அவரது ஓய்வு 10ந்தேதியாக இருந்தாலும், 9ந்தேதி, மற்றும் 10ந்தேதி சனி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், அவர் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார்.

 உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்சந்திரசூட் கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக  நியமனம் செய்து  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவித்தார். இவர் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி என்ற பெருமைக்கு உரியவர்.  இவரது பணிக்காலம் நவம்பர் 10ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சிவ் கன்னா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 11ந்தேதி பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் ஓய்வு பெறும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு இன்று (நவம்பர் 8)  கடைசி பணி நாளாகும். அவரது பணி ஓய்வு 10ந்தேதி என்றாலும், 9 மற்றும் 10ந்தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், அவர் இன்று ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இன்றுதான் அவரின்  கடைசி பணி நாளாகும்.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை தலைமை நீதிபதிக்கு இ உச்சநீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து,   நவ.11-ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு