டெல்லி: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதுடன், ஒரு வாரத்தில் சரணடையும் உத்தரவிட்டுள்ளது.
லக்கீம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில், அவரது ஜாமினை எதிர்த்து காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த இன்று தீர்ப்பு கூறப்படடது.
ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் அறிவுறுத்தி உள்ளது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.