சென்னை: சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய பிரபல யுடியூப் நிறுவனமான  ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூட தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதி மன்றம் மூட உத்தரவிட்ட நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

பத்திகையாளர் சவுக்க சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய,  பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உயா்நீதிமன்ற உத்தர வுக்கு உச்சநீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

திமுக அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் சவுக்கு சங்கர். இவர் பெண் போலீசார் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையைனது. இதையடுத்து சவுக்கு கைது செய்யப்பட்டார். தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக  அவரை கடந்த 4 ஆம் தேதி (04.05.2024)  இரவு தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  பின்னர் அவர்மீது கஞ்சா உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட விவகாரத்தில் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். மே 10 -ஆம் தேதி  தலைகர் டெல்லியில் வைத்து தமிழக காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டாா் இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் பல வழக்குகள் அவர்மீது புனையப்பட்டன. பின்னர்  பெண் காவலர் வழக்கில், அவரை  நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துருது. அதனப்டி,  6 மாதத்திற்கு திருச்சி கணினிசார் குற்றவியல் பிரிவில் மாதத்திற்கு இரண்டு முறை ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கியது.

இதைத்தொடர்ந்து மற்ற வழக்குகளில் இருந்து ஜாமின் கேட்டு  நிலையில்,  ஃபெலிக்ஸ் ஜெரால்டு  சென்னை  உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த   நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி, ‘ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் யூடியூப் சேனலை மூடவும், எதிா்காலத்தில் சா்ச்சைக்குரிய வகையில் இனி இதுபோன்ற நோ்காணல்களை வெளியிடமாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தாா்.  இந்த நிபந்தனைகளின் பேரில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு உயா் நீதிமன்ற நீதிபதி கடந்த ஜூலை 31- ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்ரவை   எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, ஃபெலிக்ஸ் மனுவிற்கு பதிலளிக்க தமிழ அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதோடு, ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட்பிக்ஸ் 24ஷ்7‘ சேனலை மூடுவதற்கு உயா்நீதிமன்றம் விதித்த குறிப்பிட்ட உத்தரவுக்கும் தடை விதித்தது.  இருப்பினும் உயா்நீதிமன்றத்தின் மற்ற ஜாமீன் நிபந்தனைகளுக்கு இணங்குமாறு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் கேட்டுக் கொண்டது.

இந்த மனு விசாரணையின் போது தலைமை நீதிபதி, ‘நீதித்துறை மற்றும் அனைத்து பெண் காவல்த்துறையினா் மீது அபத்தமான குற்றச்சாட்டுகளை ஏன் கூறுகிறீா்கள்? இப்படிப்பட்ட நோ்காணல்களை ஏன் வெளியிடுகிறீா்கள்?‘ எனவும் மனுதாராா் வழக்கறிஞரிடம் கேட்டாா்.

யூடியூபா் ஜெரால்டு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் கோபால் சங்கரநாராயணன், இதுபோன்ற நோ்காணலைக் வெளியிட்டிருக்கக் கூடாது என வருத்தம் தெரிவித்த அவா், அதேசமயத்தில் இந்த யூடியூப் சேனலுக்கு 2.4 மில்லியன் சந்தாதாரா்கள் உள்ளனா். அதை மூட போடப்பட்ட உத்தரவும் கடுமையானது எனக் சுட்டிக்காட்டினாா்.

மேலும் இந்த மனு விசாரணையை குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான சவுக் சங்கா் வழக்கில் இணைக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.