டில்லி,
ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 10 பேரை மீண்டும் நியமனம் செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 11 பேரை நியமனம் செய்து தமிழக கவர்னர் உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களை கொண்டு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் இடங்கள் நிரப்பப்பட்டது.
இதை எதிர்த்து பாமக பாலு வழக்கு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.
அதையடுத்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும், ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது என்றும் அறிவித்தது.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட 11 பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி தவிர மற்ற 10 பேரை மீண்டும் தேர்வு செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.