கத்தாரில் வரும் 2022-இல் நடைபெறவுள்ள பிபா கால்பந்து போட்டிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதர சுப்ரீம் கமிட்டி ஃபார் டெலிவரி அண்ட் லீகசி (SC) என்ற அமைப்பு பொறுப்ப்பேற்றுள்ளது இந்த அமைப்பு கட்டுமானப் பணிக்கு தேவையான பணியாளர்களை வழங்கும் சர்வதேச கட்டிட மற்றும் மர தொழிலாளர் சம்மேளனம் (BWI) என்ற அமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இவ்விரு அமைப்புகளும் இணைந்து உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் இடத்துக்கான கட்டுமான பணிகளை வரும் 2017 ஜனவரி மாதம் முதல் தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

fifa_2022

இந்த திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 2014 முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விரு அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைந்த பணியாளர் குழு ஒன்றை உருவாக்கி பணிகளை மேற்ப்பார்வையிடும். சர்வதேச கட்டிட மற்றும் மர தொழிலாளர் சம்மேளத்தின் பொதுச்செயலர் அம்பெட் யூசன் மற்றும் சுப்ரீம் கமிட்டி ஃபார் டெலிவரி அண்ட் லீகசி அமைப்பின் பொதுச்செயலர் ஹாஸன் அல் தவாடி ஆகியோர் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஒரு வருடத்தில் முப்பதாயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.