பெங்களூரு நகர காவல்துறை முன்னாள் ஆணையர் பாஸ்கர் ராவை சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் சுனில் குமார் என்கிற ‘சைலண்ட்’ சுனிலின் ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
பாஜக அலுவலகத்தின் முன் திரண்டுள்ள சுனிலின் ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சி மேற்கொண்டதையடுத்து பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக-வில் நிலவி வரும் இந்த குடுமிபிடி சண்டையால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருவதாகக் கூறப்படுகிறது.