மும்பை:

மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நகரங்களில் ஆளுங்கட்சியான பாஜவுக்கும், அந்த ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு குட்டி சட்டமன்ற தேர்தல் போல இந்த தேர்தல் பணிகள் நடக்கிறது.

1.94 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதே நாளில் 11 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே கடந்த 16ம் தேதி 15 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன்முறையாக பாஜகவும், சிவசேனாவும் எதிரும் புதிருமாக மோதிக் கெ £ண்டிருக்கின்றன. இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமன்னாவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை கடுமையாக தாக்கி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில், ‘‘மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தற்காலிகமானது தான். முதல்வர் தேவேந்தர பட்னாவிஸின் எதிர்காலம் நிச்சயமற்றது. அவர் தினமும் மும்பையை சுற்றி வந்து உத்தரவாதங்களை கொடுத்து வருகிறார். அவரது நாற்காலி சிவசேனாவை நம்பி இருக்கிறது.

அவரது சொந்த எதிர்காலம் நிச்சயமற்றது. அவர் மும்பையின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பேன் என்று கூறலாம். சிவசேனாவின் ஆதரவு தற்காலிகமானது தான். மகாராஷ்டிரா நிலையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விட்டு வைத்துள்ளோம்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘மும்பையில் ஏற்கனவே பாஜ போட்டியை இழந்துவிட்டது. தற்போது வாக்குகளை அக்கட்சி பிச்சை எடுத்து வருகிறது. கட ந்த 2 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சி பணிகளை செய்திருந்தால் ஏன் வாக்குகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபப்பட்டிரு க்கிறது. ஊழலை ஒழிப்பேன் என்று முதல்வர் கூறி வருகிறார்.

அவரது சொந்த அமைச்சரவையில் உள்ளவர்களே ஊழல்வாதிகளாக இருப்பது அவரது கட்டுப்பாடின்மையை காட்டுகிறது. தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி போலி கருத்து கணிப்பை சமூக வளைதளங்களில் செய்ய முயற்சிகள் நடக்கிறது. அந்த வேட்பாளர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.