சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.எம்.பாக்கர் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பாசிசத்திற்கு எதிரான ஓட்டுகள் சிதற கூடாது என்பதற்காக திமுகவை ஆதரிக்கிறோம்.

அசாதுதின் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதால் உருதுவை தாய் மொழியாக கொண்ட முஸ்லீம்கள் அதிகம் வாழும் வாணியம்பாடி, வேலுர், ஆம்பூர் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் திமுக கூட்டணியின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்காது

தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்ற சிறு கட்சிகளுக்கும் திமுக கூட்டணியில் வாய்ப்பளிக்க வேண்டும் எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தி உள்ளார்ர்.