ஷகிலா மலையாள படங்களில் நடிப்பதை குறைந்து கொண்டதும், அவரது ரசிகர்கள் ஆபாசபட நடிகை சன்னி லியோன் பக்கம் சாய்ந்தனர்.

இந்த நிலையில் கேரள ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தி வெளியாகி உள்ளது.

சன்னி லியோன், மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

“குட்டநாதன் மரப்பா” என்ற படத்தை இயக்கிய ஸ்ரீஜித் விஜயன், சன்னி கதாநாயகியாக நடிக்கும் படத்தை டைரக்டு செய்கிறார்.

இந்த படத்துக்கு “ஷேரோ” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உளவியல் திரில்லர் கதையான இந்த படத்தின் தொடக்க விழா கொச்சியில் நடந்துள்ளது.

இதில் சன்னி லியோன் கலந்து கொண்டார்.

தொடக்க விழாவை யொட்டி சன்னி லியோன் அந்த படத்தில் நடிக்கும் காட்சியை போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

சன்னி லியோன், இதற்கு முன்னர், மம்முட்டி நடித்த ‘மதுராஜா’ என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

தென் இந்திய மொழியில் அவர் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

– பா. பாரதி