கரண்ஜித் கவுர் வோக்ரா 2001-ஆம் ஆண்டு ஆபாச பத்திரிக்கையான “பென்ட் ஹவுஸ்” இதழின் அட்டைப்படத்திற்கு நிர்வாண போஸ் அளிக்கும் போது அவருக்கு சன்னி லியோன் என புதிய பெயர் வைக்கப்பட்டது.

தனது 19-வது வயதில் சன்னி லியோன் செக்ஸ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

சன்னி லியோனியை பற்றி எந்த செய்தி வந்தாலும் அது வைரலாகி விடுவது வழக்கம். அந்தவகையில் MTVயில் ஒளிபரப்பப்படும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா 13 வது சீசனின் (13th season of Splitsvilla) படப்பிடிப்புக்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் (Bollywood star Sunny Leone) கேரளா வந்துள்ளார்.

நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள், சம்பவங்கள் என இந்த ரியாலிட்டி ஷோவுக்கு இப்போது இன்னும் ரசிகர்கள் பட்டாளம் கூடியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்காக சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் (Daniel Weber) மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தினரும் உடன் வந்துள்ளனர். சன்னி லியோன் மற்றும் அவரின் குடும்பத்தினர் கடந்த வியாழன் மாலை திருவனந்தபுர விமான நிலையத்தில் தரையிறங்கினர்.