டெல்லி: ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சுனீத் சர்மா இன்று பொறுப்பேற்றார்.

சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது. முன்னதாக சுனீத் சர்மா, கிழக்கு ரயில்வே பொது மேலாளராக பணியாற்றினார். சுனீத் சர்மா, இந்திய ரயில்வேயில் 1979ம் ஆண்டு சேர்ந்தார்.

ஐஐடி கான்பூரில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து ரயில்வேயில் சேர்ந்தார். 40 ஆண்டுகளுக்கு மேல், இந்திய ரயில்வே துறையில் பல பதவிகளில் பணியாற்றி உள்ளார். மும்பை பாரெல் ரயில்வே பணிமனையில் தலைமை மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

ரேபரேலியில் உள்ள நவீன ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது ரயில் பெட்டிகளின்  தயாரிப்பை இரண்டு மடங்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளார். கிழக்கு ரயில்வேயில் பணியின் போது, சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.