டெல்லி
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய கொரோனா நிவாரண நிதிக்கு 5 கோடி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் 9000 மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பலரும் நிதியளித்து வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகளுக்கு தொழிலதிபர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்துறையினர் மட்டுமல்லாது, பொருளாதாரத்தில் பின்தங்கிய எளிய மக்களும் தம்மால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கூகுள் நிறுவனம், உலக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது.
மேலும் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதியாக 5 கோடியை வழங்கியுள்ளார்.
அனைவரும் மன உறுதியுடன் கொரோனாவை வெல்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்…