கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் அனைவருக்கும் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருமோ என்ற பயம் இருந்தது.
தனது வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக பிரசன்னா தெரிவித்த எதிர்ப்பு பெரும் விவாதமாக உருவானது.
தற்போது மும்பையில் உள்ள முன்னணி நடிகைகள் மற்றும் பொதுமக்கள் பலரும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் மின் கட்டண உயர்வு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில்


“மின்சாரக் கட்டணத்தைப் பார்க்கும்போது சின்ன வயதில் ஆட்டோ மீட்டர் ஓடுவதைப் பார்க்கும் ஞாபகம் வந்தது. புதிதாக வெளியாகும் படங்களின் வார இறுதி நாட்களின் வசூலுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் ஒரு யுத்தத்தைத் தொடங்கினாலும் தொடங்கலாம்”.
இவ்வாறு சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]