சென்னை,
முன்னாள் தமிழக தலைமை செயலாளரான ராம் மோகன் ராவ், அவரது  மகன் விவேக்-ஐ நுங்கம் பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இன்று மாலைக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் தமிழக தலைமை செயலாளர் வீடு, அவரது மகன் வீடு மற்றும் உறவினர்கள் வீடு, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள அவரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
அதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராம்மோகன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது மகன் வீடுகளில் இருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 16 கோடி ரூபாய்க்கு விவேக் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க ராம மோகன ராவ் மற்றும் அவரது  மகன் விவேக்-கிற்கு நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதில்  இன்று மாலை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கோரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசாரணையை தொடர்ந்து அவர்கள்  கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.