மதுரை: கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் மதுரை ரயில்வே கோட்டத்தில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏப்ரல் முதல் ஜூலை சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.
கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள்: மத்திய பிரதேசம் ஜபல்பூர் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (02122) ஏப்ரல் 18 முதல் ஜூலை 26 வரையும், மதுரை – ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) ஏப்ரல் 20 முதல் ஜூலை 27 வரையும், திருநெல்வேலி – பெங்களூர் எலகங்கா வாராந்திர சிறப்பு ரயில் (06045) மே 22 முதல் ஜூன் 12 வரையும், எலகங்கா (கர்நாடகா) – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) மே 23 முதல் ஜூன் 13 வரையும்,
ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக தாம்பரம் – கொச்சுவேலி (கேரளா) வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06035) மே 16 முதல் ஜூன் 29 வரையும், கொச்சுவேலி – தாம்பரம் வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06036) மே 17 முதல் ஜூன் 30 வரையும் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஏப்ரல் 8 முதல் ஜூன் 24 வரை காச்சிகுடா (தெலங்கானா) – மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (வண்டி எண்: 07191), ஏப்ரல் 10 முதல் ஜூன் 26 வரை மதுரை – கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயிலும் (07192), மே 6 முதல் ஜூன் 24 வரை ஓஹா (குஜராத்)- மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (09520), மே 19 ஜூன் 28 வரை மதுரை – ஓஹா வாராந்திர சிறப்பு ரயிலும் (09519), ஏப்ரல் 7 முதல் மே 26 வரை திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலும் (06030), ஏப்ரல் 8 முதல் மே 27 வரை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06029),
ஏப்ரல் 11 முதல் மே 30 வரை மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலி – தாம்பரம் வாராந்திர ரயிலும் (06070), ஏப்ரல் 12 முதல் மே 31 வரை தாம்பரம் – திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06069), ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை ஹூப்பாளி (கர்நாடகா) – ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07355), ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை ஹூப்பாளி – ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07356), ஏப்ரல் 1 முதல் மே 27 வரை மைசூர் – மானாமதுரை ரயிலும் (06237), ஏப்ரல் 2 முதல் மே 28 வரை மானாமதுரை – மைசூர் வாராந்திர ரயிலும் (06238),
ஏப்ரல் 5 முதல் ஜூன் 28 வரை காச்சிகுடா – நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (07435), ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை நாகர்கோவில் – கச்சக்குடா வாராந்திர ரயிலும் (07436), மே 5 முதல் மே 26 வரை நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர ரயிலும் (06012), மே 6 முதல் மே 27 வரை தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (06011), மே 2 முதல் ஜூன் 27 வரை சென்னை – நாகர்கோவில் வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06067), நாகர்கோவில் – சென்னை வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06068),
மே 3 முதல் ஜூன் 30 வரை சென்னை – நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06057), நாகர்கோவில் – சென்னை வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06058), ஜூன் 27 வரை செகந்திராபாத் – ராமநாதபுரம் வாராந்திர ரயிலும் (07695), ஜூன் 28 வரை ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயிலும் (07696) இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.