சூலூர் இடைத்தேர்தல் : இயந்திர பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

Must read

சூலூர்

சூலூர் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் இயந்திரம் பழுதாகி உள்ளது.

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளில் தொடங்கி உள்ளது. அத்துடன் தமிழக சட்டப்பேரவைக்கான 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்த 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியும் ஒன்றாகும்.

சூலூர் தொகுதியில் உள்ள கருமாத்தம்பட்டியில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கருமாத்தம்பட்டி தொகுதியில் உள்ள 116 ஆம் எண் வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரத்தில் இக்கோளாறு கண்டு பிடிக்கபட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு சோதனையின் போது மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பட்டன்கள் வேலை செய்யவில்லை. இதை ஒட்டி இங்கு வேறு இயந்திரம் கொண்டுவரப் பட உள்ளது. புது இயந்திரம் வந்த பிறகு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article