டில்லி:

ரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திர சேகரின் கூட்டாளி புல்கித் குந்த்ரா  தலைநகர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம்   இருந்து ரூ.50 லட்சம் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் கூறி உள்ளனர். இதன் காரணமாக டிடிவி தினகரனுக்கு சிக்கல் மேலும் அதிகரித்து உள்ளது.

ஜெ.மரணத்தை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரு தரப்பினரும் இரட்டை இலையை கேட்டதால், அதை முடக்கியது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். டில்லி சொகுசு விடுதியில் தங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பின்னர் அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

சுகேஷ் சந்திராவின் வாக்குமூலம்  இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இரட்டை இலை ஒதுக்குவது தொடர்பாதன வழக்கில் கைதான சுகேஷ் சந்திர சேகரின் கூட்டாளி புல்கித் குந்த்ரா  தலைநகர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்  இருந்து ரூ.50 லட்சம் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் கூறி உள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக டிடிவி தினகரனுக்கு மேலும் சிக்கல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.