கள்ளக்குறிச்சி:
னியாமூர் மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதியதான கடிதத்தில் உள்ள தகவல் வெளியாகியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதியதான கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ” நா நல்லாத்தான் படிப்பேன்… வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடு (equation) இருக்கு.. என்னால அந்த equation படிக்கவே வரல…அதனால் வேதியியல் டீச்சர் ரொம்ப ப்ரெஷர் பண்றாங்க… நா படிக்க மாற்றேனு கணக்கு டீச்சர் கிட்டயும் சொல்லிட்டாங்க… அவங்களும் என்ன ப்ரெஷர் பண்றாங்க…

”ஹாஸ்டல்ல படிக்காம என்ன பண்றேன்னு கேட்டு ரொம்ப திட்டிட்டாங்க… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நா படிக்க மாற்றேனு இவங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தவங்க எல்லா staff கிட்டயும் சொல்லிருக்காங்க… இன்னக்கி காலைல வகுப்புக்கு வந்த staff என்ன பாத்து நீ படிக்கவே மாற்றியாமே, விளையாட்டு தனமா இருக்கியாமேனு கேக்குறாங்க… கணக்கு டீச்சரும், கெமிஸ்ட்ரி டீச்சரும் என்ன ரொம்ப ப்ரெஷர் பண்றாங்க… என்ன முடியல…”

”கணக்கு டீச்சர் என்ன மட்டுமல்ல இங்க இருக்க எல்லாரையுமே டார்ச்சர் பண்றாங்க… சாந்தி மேடம் நான் உங்ககிட்ட ஒரே ஒரு உதவி கேக்குற.. நான் இந்த வருஷம் கட்டுன ஸ்கூல் பீஸ் எங்க அம்மாகிட்ட திருப்பி கொடுத்துடுங்க…. புக் பீஸ், ஹாஸ்டல் பீஸையும் கொடுத்துடுங்க… ஏன்னா, நான் இனி இருக்கறது கொஞ்ச நாள்தான்… ப்ளீஸ் மேடம்…

சாரி அம்மா.. சாரி அப்பா மற்றும் தம்பியிடம் சாரி” சொல்லி கடிதத்தை மாணவி முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.