லக்னோ,

உ.பி. மாநிலத்தில் 5 பேரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறது. இதன் காரணமாக கொலை, கற்பழிப்பு, வன்முறைகள் தலைதூக்கி வருகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு 15வயது சிறுமியை கற்பழித்த காமூகன்கள் விடுத்த தொடர் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு 5 பேரால் கடத்திச்செல்லப்பட்டு கற்பழித்தனர். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள ரமலா காவல்நிலையத்தில் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரமலா போலீசார்,.  சோனு, மோனு, ரோஹித், சாகர், பப்பு ஆகிய 5 பேரை கைது சிறையில் அடைத்தனர். பின்னர்  அவர்கள்  ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

வெளியே வந்த  அவர்கள் கற்பழித்த சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர் மிரட்டல் விடுந்து வந்துள்ளனர். இதன் காரணமாக பயந்துபோன அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், தற்கொலை என்று வழக்கு பதிவு செய்த எடுத்து இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும், பழைய கற்பழிப்பு வழக்குடன் சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கையும் இணைத்து விசாரிக்கவும்  உத்தரவிட்டுள்ளார்.