நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சுதீப். கன்னட இயக்குநர் எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் படம் பயில்வான்.

இப்படத்தை தமிழ் ,தெலுங்கு, கன்னடம் , மலையாளம் ,இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் ரூ . 45 கோடிக்கும் மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படம் கன்னடத்தின் அதிக பட்ஜெட் படமென்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஆர்ஆர் மோஷன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாகவும், ஆகாங்க்ஷாசிங் கதா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுதீப் ஒரு குத்து சண்டை வீரராக காணப்படுகிறார். இதன் போஸ்டரை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.