சென்னை: சென்னையில் இன்று மாலை 4.30 மணி அளவில் திடீரென மேகமூட்டத்துடன் மழை பெய்தது. அடுத்த 3மணி நேரம் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை திடீரென கருமேகங்களுடன் வானம் இருண்ட நிலையில் திடீரென மழை கொட்டியது. எங்கு நோக்கிலும் இருட்டாக காணப்பட்டது. இதனால் வீடுகளில் மாலை 4.30 மணிக்கே அனைவரும் மின்விளக்கை எரிய விட்டனர். சென்னையின் தாம்பரம் முதல் மாதவரம் வரை அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது.
இதுகுறித்து கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை பெய்யும் என கூறியுள்ளது.