சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று முற்பகல் 10 மணி அளவில் திடீரென மழை கொட்டியது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடுமையான வெப்பம் காரணமாக அவதிப்பட்டு வரும் சென்னைவாசிகளுக்கு, இன்றைய மழை இதமான குளிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில், 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ராணிப்பேட்டை, கோவை, தர்மபுரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
இநத் நிலையில், இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வாகனம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை கிண்டி, அசோக் நகர், நந்தனம், தேனாம்பேட்டை, திநகர், பெரம்பூர், கோயம்போடு, ரெட்ஹில்ஸ், மாதவரம், தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளில் இன்று முற்பகல் சுமார் 9 மணி முதலே லேசான மழை பெய்யத் தொடங்கியது. காலை 10.30 மணி அளவில் வடசென்னை பகுதியில் திடீரென கனமழை கொட்டியது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், பணிகளுக்கான சென்ற பலர் சாலையோரங்களில் தஞ்ச மடைந்தனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலும் மிதமான மழை அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகினர் . ஒரு சிலர் ஆங்காங்கே நிண்ற படி வாகனத்தை நிறுத்திவிட்டு கடைகள் பக்கம் ஒதுங்கி நின்றனர். மேலும் ஒரு சிலர் லேசான சாரல் மழையில் நனைந்தபடி தங்களது அலுவலகம் சென்றனர்.