சென்னை
சென்னை அம்பத்தூர் காவல்துறையினர் யூ டியூபர் டிடிஎஃப் வாசனின் கடையில் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

சென்னை அம்பத்தூர் அயப்பாக்கம் மெயின் ரோடு, சுபாஷ் நகரில் பிரபல யூடியூபரான டி.டி.எப்.வாசன் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த ஒருவர் டிவிட்டரில் இந்த கடை பற்றி புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில்
“இங்கு மோட்டார் சைக்கிள்களுக்கு ஜி.பி.எஸ். கருவி, அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர், ஹாரன் உள்ளிட்டவைகள் விற்கப்படுகின்றன இந்த கடைக்கு வருபவர்களால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது”
எனக் கூறி இருந்தார்.
எனவே அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் அந்த கடையில் திடீர் சோனை நடந்துள்ளது.. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது எனவும் மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கடையின் மேலாளர் ரபினா என்பவரை காவல்துறை எச்சரித்துள்ளது.
[youtube-feed feed=1]