பிரபல ஆர்.ஜே.வும், பாடகியுமன சுசித்ரா என்றாலே, “செம ஹாட் மச்சி” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது “ஹாட்” படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார் சுசித்ரா. அதாவது, தனது (முன்னாள்) நண்பர்களான திரை நட்சத்திரங்கள் சிலரது ஏடாகூட படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி அதிர்ச்சி அளித்துவருகிறார் சுசித்ரா.

திரை நட்சத்திரங்கள் தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகாவின் லீலை என்ற தலைப்பில் பதிவிட்டார்.

தன்னை,நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் ஏடாகூட படங்களை வெளியிட்டு வருகிறார்.

தனுஷின் மன்மத லீலை விளையாட்டு பாவம் ஹீரோயின்கள்.. எல்லாம் – என்று ட்விட்டி தனுஷ் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.  இது ஹன்சிகாவின் லீலை என்று கூறி அவர் யாரையோ கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை பதிந்தார். தனுஷின் நண்பனின் லீலை என இசையமைப்பாளர் அனிருத் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

பிறகு இவற்றை நீக்கியதுடன் தனது ட்வீட்டுகளை ஃபாலோயர்கள் மட்டுமே பார்க்கும்படி செய்துவிட்டார் சுசித்ரா
இப்போது அடுத்தகட்ட அதிரடியை ஆரம்பித்துள்ளார். “நண்பர்களே! பொறுமையாக இருங்கள், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பல படங்கள் வர இருக்கின்றன.  பல ஹீரோ, ஹீரோயின்களின் உண்மை முகம் வெளியிடப்படும்… அதிர்ச்சியடைய காத்திருங்கள் என்று ட்வீட்டியுள்ளார் சுசித்ரா
இதற்கிடையே, “என் அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டு விட்டது” என்றார்.

மேலும், “இது குறித்து சைபர் கிரைமில் புகார் கொடுத்துவிட்டோம், அவர்கள் என் அக்கவுண்டையே முடக்க சொல்கிறார்கள். அப்படி செய்தால், ஹேக் செய்தது யயார் என்பதை கண்டுபிடிக்க முடியாது.  நான் தனிப்பட்ட முறையில் இதை கண்டுப்பிடிக்க ஏற்பாடு செய்துள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

என்ன நடக்குதுன்னே தெரியலே என்று குழம்பிக்கிடக்கிறார்கள் நெட்டிசன்கள்.