டில்லி

மையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.   இதைப் போல் மாதத்துக்கு ஒரு முறை சமையல் எரிவாயு விலை மாற்றி அமைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு விலை 2 அல்லது மூன்று முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.  தற்போது சமையல் எரிவாயு விலை சிலிடருக்கு ரூ.1000 க்கும் அதிகமாக உள்ளது.   இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.200 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.