பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Must read

டில்லி

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி குறைப்பால் விலை குறையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்வித்துள்ளார்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இருந்தது.   தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாறுமாறாக அதிகரித்தது.   இதனால் மக்கள் கடும் துயர் அடைந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது.  இதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரிக் குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50ம் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என அறிவித்துள்ளார்.

More articles

Latest article