ஊட்டி
வரும் 2018ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது ஒரு லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நேற்று ஊட்டியில் குதிரைப் பந்தய மைதானத்தில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமி நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர், ”கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக பல மக்கள் நல திட்டங்களை செயல் படுத்தி உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது மானிய விலையில் ஒரு லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவையே மிஞ்சும் அளவுக்கு ஹவாலா ஃபார்முலா மூலமாக தினகரன் வெற்றி பெற்றுள்ளார். கொல்லைப்புறமாக நுழைந்த துரோகி இந்த தினகரன். ஸ்லீப்பர் செல் என தினகரன் சொல்லிக் கொண்டு இருக்கிறார். எங்களிடம் உள்ளவர்கள் மனசாட்சி உள்ளவர்கள். உழைப்பால் உயர்ந்து தங்கம் போல் ஜொலிப்பவர்கள்” எனக் கூறி உள்ளார்.