சசிகலா – சு. சுவாமி

சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகாலாவை  தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சுப்பிரமணியன் சுவாமிதான்.  இந்த வழக்கில்தான், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அண்மைக் காலமாக இரண்டாவது குற்றவாளியான சசிகலாவை ஆதரித்து சுப்பிரமணியன் சுவாமி பேசி வருகிறார். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. மத்திய அரசில் விசாரித்த போது திமுக அரசுதான் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியது என்று தெரிவித்தனர்” என்று கூறினார்.

மேலும்,”சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தற்போது சட்ட ரீதியாக தண்டனை கிடைத்துவிட்டது. இனி அவர் பெங்களூரு சிறையில் இருக்க வேண்டியதில்லை. இதற்காக ஆண்டுதோறும் கர்நாடாக அரசுக்கு நாம் பணம் ஏன் கொடுக்க வேண்டும். ஆகவே, சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டு