துரை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் பாமரர்களா அல்லது பயங்கரவாதிகளா என சுப்ரமணியன் சுவாமி கேட்டு உள்ளார்.

கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.   அதை ஒட்டி போலீசார் நடத்திய துப்பக்கி சூட்டில் சுமார் 13 பேர் மரணம் அடைந்தனர்.   மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.   இதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்காததற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் பாமரர்களா அல்லது பயங்கரவாதிகளா என தெரியவில்லை.  இது குறித்து முழுமையான அறிக்கை பிரதமருக்கு அளிக்கப்படவில்லை.   அதனால் அவர் இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.  மேலும் காஷ்மீரில் இது போல 100 மடங்கு பெரிய வன்முறைகள் நிகழ்கின்றன” என தெரிவித்தார்.