புதுடெல்லி:
பிரியங்கா காந்திக்கு ‘பைபோலர் டிஸ்ஆர்டர்’ எனும் மனச் சிதைவு நோய் இருப்பதால், அவரால் பொது வாழ்க்கையில் ஈடுபட முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
ஏஎன்ஐ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ” பிரியங்கா காந்தியின் உடல்நிலை பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதற்கு உகந்ததாக இல்லை.
அப்படி பொதுவாழ்க்கையில் ஈடுபட்டால் அருகில் உள்ளோரை அடிப்பார். வன்முறையில் ஈடுபடுவார்.
அவருக்கு மனச் சிதைவு நோய் உள்ளது. பிரியங்கா தனது மனச் சிதைவு நோயால் வன்முறையை வெளிப்படுத்தும்போது மக்களுக்கு இது புரியும் “என்றார்.
சுப்பிரமணியசாமியின் இத்தகைய கருத்துக்கு நாடு முழுவதும் பல்வே று தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அரசியல் ரீதியாக விமர்சனங்கள் இருக்கலாம், தனிப்பட்ட முறையிலான தாக்குதல் ஏற்புடையதல்ல என்றும் மக்கள் தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
பிரியங்கா காந்திக்கு உத்திரப்பிரதேசத்தில் புதிய பொறுப்பு கொடுத்ததையடுத்து, அவருக்கு எதிராக பாஜகவின் தனிப்பட்ட விமர்சனத்தை கூறிவரும் நிலையில், சுப்பிரமணியன்சாமியும் அதே நிலையை பின்பற்றியிருக்கிறார்.
பரபரப்புக்காக அவர் இதுபோன்று பேசுவது வழக்கம்தான் என்றாலும், ஒரு மூத்த தலைவருக்கு இது அழகல்ல என்று பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.