டெல்லி: தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மம்தாவை புகழ்ந்து அவர் கூறியது, பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைக் கும் பணியில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி, கடந்த இரு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு உள்ளார். அங்கு பிரதமர் மோடி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வரும் நிலையில், திடீரென பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி,
மனசுல உள்ளதை ஒளிக்காம ஓப்பனா பேசுற வழக்கம் நம்ம நாட்டு அரசியல்ல அபூர்வம். ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், ராஜிவ்காந்தி, சந்திரசேகர், நரசிம்மராவ் அந்த லிஸ்ட்ல இருக்காங்க. ரொம்ப காலத்துக்கு பிறகு அதுல இன்னொருத்தர் சேந்திருக்கிறார், அவர்தான் மம்தா பானர்ஜி என்று புகழாரம் சூட்டினார்.
அதனால் சு.சுவாமி மத்தா கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சாமி, “நான் ஏற்கனவே அவளுடன் (மம்தா) இருந்தேன். நான் கட்சியில் சேர வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்து உள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு, இன்று அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மோடி அரசு, பொருளாதாரம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு உட்பட ஆட்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்துள்ளது என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சுப்பிரமணிய சுவாமியின் இந்த டிவிட், மம்தாவுடனான சந்திப்பு பாஜக மேலிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது! மத்தியஅரசை தெறிக்க விட்ட சுப்பிரமணியசாமி…