டெல்லி: மோடி அரசு பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு என அனைத்துலயும் தோற்றுவிட்டது என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது குற்றம் சாட்டி வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன்சாமி, மத்திய அரசின் தவறுகளை சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறார்.

நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது என கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். ‘தற்போது மோடி அரசு எல்லாத்துலயும் தோற்று போயுள்ளது என்று நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக எம்.பி. சுப்பிரமணியன்சுவாமி மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என்று குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மோடி அரசின் அறிக்கை அட்டை:
பொருளாதாரம் — தோல்வி
எல்லை பாதுகாப்பு – தோல்வி
வெளியுறவுக் கொள்கை –ஆப்கானிஸ்தான் ஃபியாஸ்கோ
தேசிய பாதுகாப்பு —பெகாசஸ் NSO
உள் பாதுகாப்பு— காஷ்மீர் இருள்
யார் பொறுப்பு?–சுப்ரமணியன் சுவாமி

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோல்வி

எல்லை பாதுகாப்பிலும் சீனாவின் அத்துமீறலை தட்டி கேட்க முடியாத அளவுக்கு தோல்வியையே சந்தித்துள்ளது.

வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் தோல்வி அடைந்துவிட்டது.

தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டனர்.

காஷ்மீர் பிரச்சினை / உள்நாட்டு பாதுகாப்பிலும் தோல்வி; அதிலும் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

 இத்தனை தோல்விகளை சந்தித்த நிலையில்  இதற்கு யார் பொறுப்பு  என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,  “வங்காளத்தில் இந்துக்களைக் கொல்வது பற்றி அரசு என்ன நினைக்கிறிது?” இது மத்திய அரசுக்குத் தெரியாதா? உள்துறை அமைச்சருக்கு தெரியாதா? அவர் சன்யாசம் போயிட்டாரா? ஏபிகள் மற்றும் ஜிபிகள் அவர் தங்கள் புரவலர் என்பதால் அவரிடம் கேட்க வேண்டும் என்று என மற்றொரு டிவிட்டில் கூறியுள்ளார்.